Pages

Saturday, March 24, 2012

kundankulam

அணுவை பிளந்து ஏழ்  கடலைப் புகட்டி
குறுகத்தரித்த குறள் கூடச சொல்கிறது
" வருமுன் காவாதான் வாழ்க்கை......."

உப்புக் கடலோடு
உறவாடி உறவாடி
உணர்ச்சி எஜமானனுக்கு
அடிமை ஆகிப் போனது
அறிவு

அணுவின் ஆபத்தை
 கேட்டதை விட
பார்த்தபோதே புரிந்தது.

பார்த்தவுடன் நாங்களே   
போராடுகிறோம்

அந்நியச் சதி ஏதுமில்லை
 
 அந்நியச் சதி என்றால்
சாதி மட்டும் தான்

அச் சாதி சகதியையும் கடந்து
நாங்கள் கூடிய குளம்
"கூடங்குளம்"

"யுரேனியம்  ப்ளுட்டோனியம்"
போன்ற வார்த்தைகள்
எங்கள் அகராதியில்
அச்சிட ஆன தாமதத்திற்காய்
எங்கள் தலைமுறை புத்தகத்தை
கிழித்தெறிய நினைப்பது சரியா?


மின்சாரத்திற்காக
மீன்களின் சாரத்தை
காவு   கேட்பது  சரியா?

அப்துல் கலாமாக இருந்திருந்தால்
நாங்களும் ஆதரித்திருப்போம்
ஆனால்
எங்களுக்கு குழந்தைகள் உள்ளனரே?

தங்களின் தலைமுறையை காக்க
போராடும் இந்த  தலைமுறையின்
தவிப்பை தங்களின் காது மறைக்கும்
தலைப்பாகைகளை கழற்றிவிட்டு கேளுங்கள்!
தயவுசெய்து கேளுங்கள்!!

அலையால் உலை எரிக்கும்
அதிசயம் செய்பவர்கள்  நாங்கள்.

எங்கள் உலைக்கு உலை வைக்கும்
அணு உலையை அகற்றும்
அதிசயமும் செய்வோம்! நாங்கள்
 அதிசயமும் செய்வோம்!!

                     



 

Tuesday, September 28, 2010

Kavithai - Kadhal

  • இலைகளுமில்லை
         கிளைகளுமில்லை
        வேர்களுமில்லை
       ஆனாலும்
      பூத்திருக்கிறது
     என்னவள் கூந்தல் !!

  • மருதாணி சுமையை கூட
        தாங்க முடியவில்லை
       சிவந்திருக்கிறது
       என்னவள் உள்ளங்கைகள் !!!
   

Wednesday, September 8, 2010

kavithaikal

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !
தலை நிமிர்ந்தால் தட்டுகிறது
ஈழத்து முள் வேலிக் கூடாரம் !!